மட்டு நகரில் மருந்துவாங்க தனியாக சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடி முதலாளி கைது
(கனகராசா சரவணன் )
மட்டக்களப்பு நகரில் உள்ள ஆயுள்வேத மருந்துகடை ஒன்றில் மருந்து வாங்க தனியாக சென்ற பெண் ஒருவரிடம் நானும் ஆயுள்வேத வைத்தியர் என தெரிவித்து பெண்ணை வீடியோ எடுத்ததுடன் அவர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடியைச் சேர்ந்த கடை முதலாளியை வெள்ளிக்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது–
நகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் அவருக்கு கையில் தோலில் ஏற்பட்டுள்ள நோய் தொடர்பாக சம்பவதினமான வெள்ளிக்கிழமை (28) தனியார் வைத்தியசாலை ஒன்றில் விசேட வைத்திய நிபுணர் ஒருவரிடம் நோயை காண்பித்துள்ளார்.
இதன்போது அவர் ஆயுள்வேத மருந்து ஒன்றை எழுதி கொடுத்து அதனை நகரில் உள்ள ஆயுள்வேத கடை ஒன்றின் பெயரை தெரிவித்து அங்கு இந்த மருந்தை வாங்கி பயன்படுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் சிபார்சு செய்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியர் சிபார்சு செய்த நகரிலுள்ள ஆயுள்வேத மருந்துக்கடையை தேடி குறித்த பெண் நேற்று இரவு 7.15 சென்ற போது அங்கு கடை ஒற்றக் கதவில் திறந்திருப்பதை கண்டு கடை மூடப்படப் போகின்றது என அவசர அவசரமாக கடைக்குள் சென்று வைத்தியர் எழுதி கொடுத்த மருந்து சிட்டை கடை முதலாளியிடம்; கொடுத்துள்ளார் ;
இதன்போது கடைக்குள் தனியாக இருந்துள்ள காத்தான்குடியைச் சேர்ந்த கடை முதலாளியான 34 வயதுடையவர்; தானும் ஆயுள்வேத வைத்தியர் எனவும்; எனவே உங்கள் கண்ணை காட்டுங்கள் நான் பார்க்கின்றேன் அப் பெண் அவரும் ஒரு வைத்தியர் என நினைத்து அவரிடம் கண்ணைகாண்பித்தபோது அவர் கை தொலைபேசியிலுள்ள வெளிச்சத்தை அடித்து கண்ணை பார்ப்பது போல போனில் வீடியோ எடுத்துக் கொண்டு அவரிடம் சேட்டை விட முயற்சித்த போது அப் பெண் உடனடியாக வீடியோ படம் எடுத்ததை கண்டு சத்தம் போட்டு போனை பறிக்கமுற்பட்ட போது கைதொலைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோவை உடனடியாக கடை முதலாளி அழித்துள்ளான்
அந்த நேரத்தில் சதம்கேட்டு வீதியில் நின்றவர்கள் அங்கு ஒன்று திரண்டு கடை முதலாளியினால் அழிக்கப்பட்ட வீடியோவை மீண்டும் மீள எடுத்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் பொலிசாருக்கு செய்த முறைபாட்டையடுத்து உடனடியாக கடை முதலாளியை கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதில்; கைது செய்யப்பட்டவரை சான்று பொருளான வீடியோ எடுத்த கையடக்க தொலைபேசியையுடன் சனிக்கிழமை (29) மட்;டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத் தப்பட்டபோது அவரை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் 2023 ம் ஆண்டு ஜனவரி 23 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.