கல்முனை மாநகர சபை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை !
நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான பெரியநீலாவணை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையம் சில காலம் செயற்படாமல் இருந்து வந்தது. கல்முனை பிராந்திய விவசாயிகளுக்கு சேதனப் பசளையின் தேவை அதிகமாக உள்ளதால் மீண்டும் இந்த நிலையத்தை இயக்குவதற்கான நடவடிக்கைகளின் ஆரம்ப பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தலைமையில் இந்த பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை சுகாதாராப் பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் யு. எம். இஸ்ஹாக், சுகாதார மேற்பர்வை உத்தியோகத்தர் எம். ஏ. அதுகம் உட்பட கல்முனை மாநகர சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



