கல்முனை மயானத்தில் நிகழும் அவலம்!


கல்முனை மயானத்தில் புதைக்கப்பட்ட மனித உடல்களின் அங்கங்கள் ஆங்காங்கே தோண்டி வீசப்பட்ட நிலையில் உள்ளதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் இங்கு தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், அயலில் உள்ள குடியிருப்பு மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை மயானம் இடவசதி குறைவாக காணப்படுவதால் சடலங்கள் புதைக்கின்ற போது சீரான ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றி சடலங்களை அடக்குவதற்குரிய வழி வகைகளை செய்ய வேண்டும்.

கல்முனை மயானத்தை கல்முனை மாநகர சபை சீராக பராமரிக்க தவறுகின்றதா? எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கல்முனையில் உள்ள ஆலய நிருவாகங்கள், மயானம் அமைந்துள்ள வட்டாரத்துக்குரிய மாநகரசபை உறுப்பினர்கள் குறித்த விடயத்தை கவனத்தில் எடுத்து சடலங்களை சீராக அடக்கம் செய்தல், மயானத்தை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களால் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.