கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 01 D கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அரசகாணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் இந்த காணி பத்திரங்கள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த உறுதிப் பத்திரங்களை கல்முனை தெற்கு பிரதேச செயலகம் தன்னகப்படுத்தி வருடகணக்காக வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததற்கு எதிராக அண்மையில் இந்த மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அந்த மக்களுக்கான உறுதிப் பத்திரங்கள் இதுவரை வழங்கப்படாததால் இப்பிரதேச மக்கள் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பவற்றுக்கு எதிராக கல்முனையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்கள்.

இந்தச் செய்தியுடன் தொடர்புபட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்

எங்கள் உரிமைகளை பறிக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் – கல்முனை வடக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்!

https://www.kalmunainet.com/archives/82467

 SEP 12, 2022