பெரியநீலாவணை சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு!
-அரவி வேதநாயகம்
பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு இன்று 15ம் தகதி இடம்பெறவிருக்கின்றது.
பெரியநீலாவணை கமு/சரஸ்வதி வித்தியாலய மண்டபத்தில் வைத்திய கலாநிதி கா.ஜெயசுதன் தலைமையில் 2022.10.15 ம் திகதி பி.ப 2 மணிக்கு இடம்பெறவிருக்கின்ற இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிசன் பொது முகாமையாளர் ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் உடன் முதன்மை அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்துகொள்ளவுள்ளதுடன் கௌரவ விருந்தினர்களாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன், பேராசிரியர் சோ.சுதர்சன், பீடாதிபதி கு.துரைராஜசிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலாளர்கள், பணிப்பாளர்கள், வைத்திய அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிவபாதசுந்தரம் சுதாகரனின் “நீலையூர் சுதா” எனும் புனைபெயருடன் கிராமிய மணங்கமளும் வகையில் நாட்டுப்புற வாழ்கை, நிகழ்கால நாட்டு நடப்புக்கள் என அனைவரும் ரசித்து வியக்கும் வகையில் படைக்கப்பட்ட கவிதைப் படைப்புக்கள் தொகுப்பாக “கிடுகு வீடு” எனும் பெயரில் திருமதி. லலிதா சுதாகரன் ஆல் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றது.
அத்துடன் அதே மேடையில் பைந்தமிழ் சுடர் நீலையூர் சுதா வினால் பெரியநீலாவணையின் மறைந்த, ஓய்வுநிலை மற்றும் சேவையிலுள்ள கல்வியியலாளர்கள், உயர் அதிகாரிகள் என 24 பேர் “வாழும்போது வாழ்துவோம் – நீலையூரின் சாதனையாளர் விருது – 2022” எனும் தொனிப்பொருளிலான கல்விச் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கின்றனர்.
அம்பாரை மாவட்டித்தின் வடக்கு எல்லையின் விவசாயக் கிராமமான பெரியநீலாவணையை பிறப்பிடமாக கொண்ட சிவ.சுதாகரன் கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார்.
மேற்படி நிகழ்வுகளுக்கான பிரதான ஊடக அனுசரணையாளர்களாக “கல்முனைநெற் ஊடக வலையமைப்பு” செயற்படுவதுடன் முழு நிகழ்வுக்குமான நேரலையை கல்முனைநெற் முகப்புத்தக குழுமம் மற்றும் கல்முனைநெற் முகப்புத்தக பக்கம் என்பவற்றில் வாசகர்கள் கண்டுகளிக்க “கல்முனைநெற் ஊடக வலையமைப்பு” ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.