(கலைஞர்.ஏ.ஓ.அனல்)
கிழக்கு மாகாணத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குற்பட்ட துறைநீலாவணை மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் மாகாண மட்டத்தில் சாதனை படைத்து பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இம்மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு 11.10.2022 (செவ்வாய்) பாடசாலை ஒன்று கூடலின்போது பாடசாலை அதிபர் T.ஈஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் R.லிங்கநாதன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பாடசாலை சமூகம் சார்ந்து அனைவரும் இம்மாணவர்களை பாராட்டி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண விளையாட்டு போட்டி நிகழ்வானது கந்தளாய் லீலாரெத்தின விளையாட்டு மைதானத்தில் 05/10/2022 ஆம் திகதி முதல் 09/10/2022 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இப்போட்டிகளில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் பா.பாரதன் மூன்றாம் இடத்தினை பெற்று வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தோடு, 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் அ.அனுஸ்கா இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இம் மாணவர்களுக்கான பயிற்சியை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான அ.மயூரதன் மற்றும் கோ.முரளி கிருஷ்ணன் ஆகிய இருவரும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.