ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 சிறுவர்களை காவு கெகாண்ட ஆபத்தான பானி மருந்து இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பானி மருந்தினை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் காம்பியாவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்ததாக முன்னர் கூறியிருந்தது.
எனினும் ஆசியா, ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்காவின் 42 நாடுகளுக்கு இந்த நிறுவனம் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த பானி மருந்தினை உற்பத்தி செய்த மொடர்ன் பார்மடிகல்ஸ் நிறுவனம் பல நாடுகளுக்கு தனது உற்பத்திகளை ஏற்றுமதி செய்துள்ளமை அந்நிறுவனத்தின் இணைய தள விபரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
மறுப்பு தெரிவித்திருந்த சுகாதார அமைச்சு
காம்பியாவில் 66 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் 4 வகையான பானி மருந்துகள் குறித்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், வேறும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை எனவும் இந்திய சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த இந்திய நிறுவனம் வருடாந்தம் பெருந்தொகை மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருவதாக தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.