லிட்ரோ நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் சிலிண்டர் 271 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டர் 107 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 48 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது லிட்ரோ சமையில் எரிவாயுவின் புதிய விலை

இதோ!

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்- 4,280 ரூபா

05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்- 1,720 ரூபா

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்- 800 ரூபா.