சிறுவர் துஷ்பிரயோக குற்றசாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிணை வழங்கியது. 3 தனி தனி வழக்குகளுக்கான தலா 3 பேரின் 5 லட்சம் படி 9 பேரின் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
விகாராதிபதி நேற்றைய தினம் விகாரைக்கு திரும்பி இருந்த நிலையில், விகாராதிபதி பிணைக்காக கையொப்பம் இட்டவர்கள் 2 பேரின் வீட்டின் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
கல்முனை 01 C பகுதியில் அமைந்துள்ள சிங்கள கொலானி பகுதியில் உள்ள முஸ்லிம் குடியேற்ற தொடர்மாடி குடியிருப்பு பகுதிக்கு முன்னால் உள்ள 2 பேரின் வீட்டின் மீதே வாள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
குறித்த விகாரையில் 3 சிறுவ தேரர்கள் மீது பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த விடயம் தொடர்பில் பல விடயங்கள் சமூக வலைதளங்களில் முஸ்லிம் தரப்பினரால் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
அதே வேளை விகாராதிபதி பிணைக்கு மனுவை எதிர்த்து கல்முனை நீதாவன் நீதிமன்றத்தில் போலீசாருடன் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட குழு வாதங்களை முன் வைத்திருந்த நிலையில், விகாராதிபதி க்கு பிணை வழங்கியது கல்முனை நீதவான் நீதிமன்றம்.
ஏற்கனவே, குறித்த சிறுவ தேரர்கள் அம்பாறை பகுதியில் இருந்த விகாரை ஒன்றின் தேரர் ஒருவரினால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சிறுவ தேரர்கள் கல்முனை விகாரையில் இணைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.
கல்முனை விகாராதிபதி கல்முனை பிரதேச செயலக விடயம் தொடர்பில் உண்ணாவிரதம் இருந்து, கல்முனை தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது