இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்றிரவு காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக தனது 41ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சுகயீனம் காரணமாக நேற்றிரவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முன்னணி நடிகராகத் திகழ்ந்த தர்ஷன் தர்மராஜ் பல சகோதர மொழி திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். அவருக்கு இலங்கை கலைத்துறையினர் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.