பேராதனை பல்கலைக்கழக ஆய்வின் தகவல் குடும்பம் ஒன்றின் மீதான வரிச்சுமை 28,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42% வீதமாக உயர்ந்துள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விவரவியல் துறையில் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிய வந்ததாக அவர் நேற்று நடத்தி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்படி ஒரு சராசரி குடும்பத்தின் வரி சுமை சுமார் 28,000 ரூபாயாகும்.
அரசாங்கம் பெருமளவிலான மறைமுக வரிகளை மக்கள் மீது சுமத்துவதால் இந்த நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
