கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு!
கல்முனை ஆதார வைத்தியசாலையின் உள்ளக பதவி உயர்வுகள் கடந்த 09.09.2022 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம் பெற்றது.
கடந்த காலங்களில் அரச பதவி உயர்வு இடம் பெற்றதன் காரணமாக நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய .V.கிருஷ்ணகுமார் மற்றும் நிதி உதவியாளர் திருமதி.குமுதினி வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றப்பட்டதை தொடர்ந்து இவ் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு இடம் பெற்றது.
இதில் முன்னாள் பிரதம சுகாதார முகாமைத்துவ உத்தியோகத்தர் .T.தேவஅருள் புதிய நிர்வாக உத்தியோகத்தராகவும், கடந்த பல வருடங்களாக நிதிப்பிரிவில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி .K.விஜயலெட்சுமி புதிய நிதி உதவியாளராகவும் முன்னைய நாட்களில் நிர்வாக பிரிவில் சுகாதார முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய திருமதி .ரோசி சுகுமாரன் புதிய பிரதம சுகாதார முகாமைத்துவ உத்தியோகத்தராகவும் தங்கள் கடமைகளை வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வில் உதவி வைத்திய அத்தியட்சகர் ஜெ.மதன் மற்றும் வைத்தியசாலை கணக்காளர் .M.கேந்திரமூர்த்தி அவர்களுடன் திட்டமிடல் பிரிவு, நிர்வாகப்பிரிவு மற்றும் நிதிப்பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
















