இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீட்டை வெளிப்படையாக சீனா எதிர்த்துள்ளது.
திங்களன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான உரையாடலின் போது ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சென் சூ இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான தீர்மானமானம் அரசியல்மயப்படுத்தப்பட்டது
இலங்கைக்காக வெளிப்படையாகப் பேசினார் மற்றும் வெளிநாட்டின் தலையீட்டை எதிர்த்தார். குறிப்பாக நல்லிணக்கம், புனரமைப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையின் பாரம்பரிய நட்பு அண்டை நாடான சீனா, தேசிய இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும், சமூக ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும், பொருளாதார மீட்சியை அடைவதிலும் இலங்கையை உறுதியாக ஆதரிக்கிறது.
தற்காலிக நெருக்கடிகளை சமாளிக்க இலங்கை அரசாங்கம் மக்களை வழிநடத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது அரசியல்மயப்படுத்தப்பட்டதன் விளைவாகும் என சீனத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இது பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத கொள்கைகளுக்கு கட்டுப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது சம்பந்தப்பட்ட நாடான இலங்கையால் அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் ஆக்கபூர்வமான பங்கை வகிக்கவில்லை.இலங்கையின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை எந்தவொரு நாடும் சாதகமாகப் பயன்படுத்தி சுயலாபம் தேடுவதை எதிர்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.