ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன்

……………………………………………………

ஒரு கணம் டாஸ் செல்வாக்கை புறக்கணித்து (Ignore the influence of Toss), பாகிஸ்தான் அணி ஸ்லிம் ஃபேவரிட் என இறுதிக்குள் நுழைந்திருக்கிறது. அவர்கள் உலகின் இரண்டாவது T20 அணியாகும், மேலும் தொடக்க ஜோடியான முகமது ரிஸ்வான்,பாபர் அசாம் மற்றும் அவர்கள் உலக கிரிக்கெட்டில் மிகவும் அழிவுகரமான T20 பேட்ஸ்மேன்கள். தரநிலையில் முதலாம், இரண்டாம் துடுப்பாட்ட வீரர்களாக இருவரும் உள்ளனர். இவ் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக அதிக ஓட்டங்களை ஸ்கோரை அடித்த வீரர்களில் ரிஸ்வான் 226 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தாலும் பாகிஸ்தானின் பேட்டிங் இப்போதும் கிளிக் ஆகவில்லை, குறிப்பாக பாபர் ஃபார்மிற்காக போராடி வருகிறார். அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 63 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார், மேலும் அவரது மோசமான நீட்டிப்பு தொடர்ந்தால், அது நிச்சயமாக இலங்கையின் முரண்பாடுகளை குறைக்கும். கிரிக்கெட்டின் ஃபார்ம் என்னவாக இருந்தாலும் கிரிக்கட் வல்லுனர்கள் கூறுவது போல் Form is temporary class is permanent என்பதாற் போல், திடீரென கட்டுகளை தூக்கி எறிந்து வேகமாக சதம் அடிக்கக் கூடிய Classic player அவர். எப்படியிருந்தாலும், பாகிஸ்தானின் கேப்டன் இலங்கை அணிக்கு ஒரு முக்கிய நபராக இருப்பார். முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட Farhar Zaman இவ் சுற்றுப் போட்டி முழுவதுமாக சோடைபோயிருப்பது மூன்றாவது வீரருக்கான இடைவெளியாக பாகிஸ்தான் அணியில் நீடிப்பதால் இலங்கை பந்துவீச்சாளர்கள் Man In Form இல் உள்ள ரிஸ்வானின் விக்கட்டை வீழ்த்தி முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தங்களை அதிகரிப்பர். இதற்கான துருப்புச்சீட்டாக மகேஸ் தீக்சன கப்டன் தசுன் சாணக்கவின் மூலபோயங்களால்
பட்டை தீட்டப்பட்டுக்கொண்டிருப்பார்.
இவர்களைத் தவிர்த்து பேர் சொல்லும்படியாக சர்வதேச போட்டிகளில் கவனம் பெறாத நவாஸ், அலி, ஆகியோரின் பின்வரிசை அதிரடிகளுடனே பாகிஸ்தான் அணியின் வெற்றி பெரும்பாலும் நிரப்பப்பட்டிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்யும் போது பாகிஸ்தான் நன்றாக இல்லை என்பதால் டாஸ் ஒரு முக்கிய காரணியாக பாகிஸ்தானுக்கு காணப்படும், இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இரண்டு ஆட்டங்களில் அவர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். இந்தச் சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான்
டாப்-ஆர்டர் பேட்டர்கள் எவரும் 120+ ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருக்கவில்லை, குறிப்பாக போட்டியில் 50 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டவர்கள். பாகிஸ்தான் சேஸிங்கில் துரத்தும்போது ரிஸ்வான் எப்போதும் போட்டியை தனது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார். பிட்ச்சின் தன்மை தவிர்த்தும் Toss என்பது உளவியல் ரீதியாக பாகிஸ்தானையே அதிகமாக பாதிக்கும். எனவே முதலில் டாஸ் வென்று பீல்டிங் செய்வதே பாகிஸ்தானின் சிறந்த வாய்ப்பாக பார்க்கும்.

மறுபுறத்தில் வேகப்பந்து பந்துவீச்சு துறை பயிற்சியாளர் சோன் டைட்டின் முனைவாள்களால் பயிற்றுவிக்கப்படுகிறது, காயத்தால் விலகிய சஹீன் அப்ரிடியின் இடத்தை நஸீம் ஷா, haris rauf, Muhammad Hasnain,Shahnawaz Dahani நிரப்பப்பட்டிருக்கிறது. இவர்கள் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் காட்டுவது பாகிஸ்தானின் பலம்.இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களான லெக் பிரேக் பந்துவீச்சாளர் ஷதாப் கான் (ER 5.79 மற்றும் 7 விக்கெட்டுகள்) மற்றும் இடது கை ஸ்பின்னர் முகமது நவாஸ் (ER 6.05 மற்றும் 8 விக்கெட்டுகள்) ஆகியோரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் பாகிஸ்தான் அணி அடுத்த போட்டியில் தங்களின் பந்துவீச்சால் வெல்லக்கூடிய உபாயங்களுடனே களமிறங்கும்.

Vintage Sri Lanka is back என்பதாற் போல் படுமோசமாக ஆரம்பித்து அட்டகாசமாய் ஆனால் ஆரவாரமின்றி கிரிக்கெட் நிபுணர்களின் எதிர்வுகூறல்களை சுக்குநூறாக்கி இலங்கை அணி குசல் மெண்டிஸ், தசுன் ஷனக மற்றும் பானுக ராஜபக்சே ஆகியோரின் பெரும் துடுப்பாட்ட பங்களிப்பின் மூலம் கிண்ணத்தை வெல்வதற்கு என கணிக்கப்பட்ட விருப்பமான அணிகளை விட சிறந்த வடிவத்தில் விவாதிக்கக்கூடிய வகையில் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. இதுவரை ஐந்து ஆட்டங்களில், இலங்கை வீரர்கள் 28 சிக்ஸர்கள் மற்றும் 62 பவுண்டரிகளை அடித்துள்ளனர், இது அவர்கள் தங்களை மீட்டுக்கொண்டிருக்கும் எழுச்சிக்காக போட்டியை எவ்வாறு அணுகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
பந்துவீச்சில் மகேஷ் தீக்ஷன வனிந்து ஹசரங்க பிரதான சுழல் பந்துவீச்சு பங்காளியாக வலம் வருகிறார்கள். முதல் எட்டு துடுப்பாட்ட வீரர்களில் ஆறு வீரர்களை சகலதுறை ஆட்டக்காரர்கள். Bhanuka rajapaksa power hitter, தசுன் சாணக்க மற்றும் கருணாரத்ன போட்டியை வெற்றிக்காக முடிப்பத்ற்காக இறுதி வரை போராடக்கூடிய வீரர்கள், இவர்களின் Finishing Role செய்யக்கூடிய பல அண்மைக்கால போட்டிகளை நாம் கண்டிருக்கிறோம். இதைவிட இலங்கையின் புதிய பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் – இங்கிலாந்தின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் மகிழ்ச்சியற்றவராகவே இருந்ததாக செய்திகள் வெளியானது காரணம் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் அணித்தேர்வின் தலையீடும் அதிக அழுத்தங்களும். ஆனால் ஒரு இரசிகனாக கணிக்கக் கூடிய வகையில் போர்ம் இழந்து தவிர்க்கும் வீரருக்கு சரியான இடைவெளி கொடுத்து மாற்றுவீரருக்குச் செல்லும் சுதந்திரத்தை இலங்கை அணி நிர்வாகம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது இவருக்கு தற்போது, ஒவ்வொரு போட்டி முடிவிலும் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் தாயைக் கண்ட மான்குட்டி துள்ளிக் குதிப்பதைப் போல் மகிழ்ச்சித் தோரணையில் அங்கலாய்த்துக் கொண்டிருப்பார். இது இவ்வாறிருக்க காயத்தால் விலகிய பிரதான வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீரவின் இடம் மதுசங்கவினால் சற்று நிரப்பப்பட்டாலும் அவருக்கு இணையான பந்துவீச்சாளராக அறியப்பட்ட அசித்த பெர்னான்டோ ஓட்டங்களை வாரிவழங்குவது ஏனைய பந்துவீச்சாளர்களுக்கான அழுத்தாமாகிறது. ஆனால் கடந்த அறிமுகப் போட்டியில் ஓரளவு பிரகாசித்த Pramod Madushan மீண்டும் அணிக்குள் உள்வாங்க வாய்ப்பிருக்கிறது. தொடர் out of form இனால் அவதியுறும் சரித் அசலங்கவிற்குப் பதிலாக கடந்த போட்டியில் இடம்பெற்ற தனஞ்சய டி சில்வா குறைந்தபட்சம் பந்துவீச்சுப் பங்களிப்புக்காவது மீண்டும் அணிக்குள் உள்வாங்க வாய்ப்பிருக்கிறது.

துபாய் சர்வதேச மைதானத்தின் பிட்ச்சில் தட்ப நிலை நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்டுள்ளபடி, இது சேசிங் அணிக்கு சாதகமான முடிவுகளை தரவல்லது, இங்கு விளையாடிய கடைசி 19 போட்டிகளில் 16 ஆட்டங்களில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்யும் அணியானது ஓவருக்கு 10 ரன்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் முதல் ஆறு ஓவர்கள் புதிய பந்தில் அதிகம் ஸ்விங் ஆகும். நேற்றைய போட்டியில் பலமிக்க பாகிஸ்தான் அணி இலங்கையின் முதல் மூன்று விக்கட்டுக்களையும் வீழ்த்த பயன்படுத்திய மிகக் கூர்மையான ஆயுதம் இந்தப் பந்துவீச்சுப் பாணி. ஆனால் இலங்கை அணியில் அவ்வாறு சொல்லிக்கொள்ளும் படி 140+ Km வேகத்தில் பந்தை. Out swim, In swim செய்யும் பந்துவீச்சாளர் இல்லை என்பதே அணிக்குள் தற்போதுள்ள பிரச்சினை, ஆதலால் கடந்த நான்கு போட்டிகளிலும் Chasing இல் வெற்றி பெற்றிருந்தாலும் இறுதிப்போட்டியில் Toss is the winner என்ற கோட்பாட்டுடன் இலங்கை அணி களமிறங்காமல் Toss இனை வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்வு செய்தால் 155-165 ஓட்டங்களுக்குள் பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தாவிட்டால் ஆசியக் கிண்ணத்தை பாகிஸ்தான் மூன்றாவது முறையாக வெல்லும்.

பாகிஸ்தான் அணி வெளிச்சூழலால் கணிசமான பாகிஸ்தானிய மைதான ஆதரவாளர்களுடனே களமிறங்கும். ஆனாலும் அணி உட்கட்டமைக்கப்பட்ட விதம், விளையாடும் அணி வீரர்களின் current form என்பதைக் கொண்டு எதிர்வு நோக்கினால் அரசியல், பொருளாதார நெருக்கடியால் மனமுடைந்து மீண்டு கொண்டிருக்கும் 21 மில்லியன் மக்களின் மருந்தாக ஆறாவது முறையாக ஆசியக்கிண்ணத்தை தாய் மண்ணுக்கு சமர்பிக்கும் வாய்ப்பு இலங்கை அணிக்கு பிரகாசமாகவே உண்டு.

“இவன் காந்தன்”