இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரியவருகிறது.
பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ஜனாதிபதி செயலகம்

மகாராணியின் இறுதிச் சடங்கு நடைபெறும் தினத்திற்கு முதல் நாள் ஜனாதிபதி லண்டன் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார். இரண்டாவது எலிசபெத் மகாராணி கடந்த வியாழக்கிழமை ஸ்கொட்லாந்தின் பல்மோரல் காஸ்டலில் காலமானார்.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்

இலங்கை அரசு அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தனது இந்த குறுகிய கால விஜயத்தின் போது பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.