பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தலைமைத்துவ கருத்தரங்கு!
பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவக் கருத்தரங்கு அதிபர் அருட் சகோதரர் எஸ் சந்தியாகு தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவருமான வே.ஜெகதீசன் கலந்து கொண்டதுடன், வளவாளராக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளரும் கார்மேல் பற்றிமாவில் 17 வருடங்களாக ஆசிரியர் சேவை புரிந்தவருமான கே. ஞானரெட்ணம் பங்குபற்றியிருந்தார்.
இந்நிகழ்வின்போது கார்மேல் பற்றிமாவில் இருந்து இம்முறை 126 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்காக அதிபர் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இக்கருத்தரங்கில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் பொருளாளரும் மாவட்ட லயன்ஸ் கழக ஆளுநர் ஆலோசகருமான லயன் ஸ்ரீரங்கன், செயலாளர் லயன் அனோஜ், லயன் பிரகலதன், லயன் சங்கீத், லயன் நிதர்ஷன், லயன் ராஜேஷ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.





