சமூர்த்தி பயனாளிகள், வயோதிபர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான இந்த வருட கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் ஐயாயிரத்து 200 கோடி ரூபாவை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்காக 14 கோடி 50 இலட்சம் டொலர்கள் இந்த வருடத்தின் முதல் ஆறுமாத கால பகுதியில் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகவும் இது தவிர ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் மேலும் 14 கோடி 50 இலட்சம் டொலர்கள் வழங்கப்படுவதாகவும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.
நியமைச்சின் செயலாளர் தகவல்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இதுதவிர உலக சுகாதார அமைப்பினால் வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு 61 ஆயிரம் குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான போஷாக்கு பொதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 6 இலட்சம் குடும்பங்களை தெரிவு செய்து எதிர்காலத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி ஒதுக்கீட்டு சபையின் தலைவர் பி.விஜயரட்ன தெரிவித்தார்.
சமூர்த்தி உதவி
இதற்கான தகவல்களை திரட்டுவதற்கென 14 ஆயிரம் ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் எதுவித அரசியல் வேறுபாடுகளோ அழுத்தங்களோ இன்றி அடையாளம் காணப்படுவார்கள்.
இவ்வாறு தெரிவு செய்யப்படுவர்களை கொண்டு தேசிய தகவல் கட்டமைப்பு ஒன்றை அமைக்க அராசங்கம் தீர்மானித்துள்ளது.