பைஷல் இஸ்மாயில்
வி.மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு” எனும் கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை இலங்கை வங்கிக் கிளையின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ந.து.ரகுராம் தலைமையில் திருகோணமலை நேற்று (28) மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் பிரதம அதிதியாகவும், திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் மற்றும் திருகோணமலை உதவி தொழில் ஆணையாளர் செல்வி நவஜீவனா நவரத்னராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களானவும், இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிரதேச முகாமையாளர் க.பிரபாகரன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.