இலங்கை – இந்தோனேசியா நாடுகளுக்கிடையே இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தி 70வது ஆண்டு நிறைவு விழா இந்தோனேஷியா உயர்ஸ்தானிகர் டேவி கஸ்டினா டொபிங் ( Dewi custina Tobing) தலைமையில் கொழும்பு இந்தோனேசியா உயர்ஸ்தானிக காரியாலயத்தில் அமைந்துள்ள ரிப்டாலொகா (Riptaloka) மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம விருந்தினராக நீதி,சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார்.
இதில் சர்வமத தலைவர்களான வணக்கத்துக்குரிய சோமானந்த தேரர்,கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா, அருட்தந்தை அனுரா பிரீஸ்,மௌலவி நுஸ்ரத் நௌபர்கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வின் போது இந்தோனேஷியா உயர்ஸ்தானிகர் மற்றும் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா ஆகியோர் ஒருவருகொருவர் மரியாதை செலுத்திகொண்டனர்.