கல்முனை வடக்கு பிரதேச செயலக 29 கிராம சேவகர் பிரிவுகளும் கல்முனை தெற்குடன் இணையத்தில் இணைப்பு – கல்முனை தமிழரின் கோவணத்தையும் பறித்த பின்பா தமிழ் தலைமைகள் விழிக்கும்?
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அரச இணையத்தளத்தில் இருந்து நீக்கம்…. தமிழ் அரசியல் தலைமைகள் இனியும் மௌனமாக இருக்கப் போகின்றார்களா?
பௌதிக ஆளணி வளங்களுடன் 29 கிராம சேவகர் பிரிவுகளுடன் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இனவாத அரசிகள் குழுக்களால் தொடர்ச்சியாக பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன என்பது யாவரும் அறிந்த விடயம்.
தற்போது இன்னும் ஒரு படி மேலாக இருக்கும் ஒவ்வொரு அதிகாரங்களையும் பறிக்கும் சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கிடைக்க வேண்டிய காணி நிதி அதிகாரங்கள் வழங்கப்படாதது ஒரு புறம் இருக்க அண்மையில் இருந்த காணி அலுவலகம் கூட கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அரச இணையதளத்தில் இருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான இணையதள இணைப்பும் இன்று நீக்கப்பட்டுள்ளதுடன் இணையத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 29 கிராம சேவகர்கள் பிரிவுகளும் கல்முனை முஸ்லிம் பிரிவுடன் இணைத்து 58 பிரிவுகளாக இணைத்து தற்போது காட்டப்படுகிறது.. இனியும் தமிழ் அரசியல் தலைமைகள் நித்திரையில் இருந்து விழிக்கமாட்டார்களா?
கட்சி பேதங்களை மறந்த உடனடியாக அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான தீர்வினை பெற்று தர வேண்டும்.
கல்முனை வடக்கு பிரதேசத்துக்கு எதிராக இவ்வாறு தொடர்ச்சியாக அநீதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நியாயம் எமது பக்கம் இருந்தும் இதனை தடுத்து கல்முனை வடக்கு பிரதேசத்துக்கான அதிகாரங்களை வழங்க தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் அதிகாரிகளுக்கும் முடியாமல் இருப்பது மிகவும் வேதனையான விடயமே.
இது தமிழ் அரசியல் தலைமைகளின் இயலாமையா அல்லது கல்முனை தமிழரை அவர்கள் கணக்கில் எடுக்காத நிலையா… இனியும் தொடருமா அநீதி…. இல்லை தமிழ் அரசியல் தலைமைகள் இனியாவது விழிப்பார்களா?