முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷஎதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியிருந்தார்.
வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறிய அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
