(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு நகரில் ஆண் ஒருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட சம்பவத்தில் அவரை பொல்லால் தாக்கிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
முனைத்தீவு பெரிய போரதீவு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய வல்லிபுரம் அன்பழகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த 11ம் திகதி மட்டுநகர் லொயிஸ் அவனியூர் வீதியிலல் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் வீதி ஓரத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து 12 ம் திகதி குறித்த சடலத்தை அவரது மனைவியார் அடையாளம் காட்டிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசாரணையில் சிசிரி கமரா ஒன்றினை சோதனையிட்டபோது அதில் உயிரிழந்தவரை இருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து இரு தடவைகள் பொல்லால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளதையடுத்து அந்த இருவரை அடையாளம் கண்டனர்.
இதில் நகர்பகுதியைச் சேர்ந்த 22,21 வயது இளைஞர்கள் இருவரையும் சந்தேகத்தில் நேற்று சனிக்கிழமை கைது செய்ததுடன் சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மதுபோதைக்கு அடிமையாகிய இவர் மனைவியுடன் பிரிந்து அவரது தாயாருடன் வாழ்ந்து வந்ததுடன் வவுணதீவு பிரதேசத்தில் நகைகடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும் அதன் சம்பவதினம் குறித்த வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்துக்கு அருகில் உடுப்பு இன்றி வீதியில் இருந்துள்ள நிலையில் அந்த வீதியால் மோட்டர்சைக்கிளில் பிரயாணித்த இரு இளைஞர்களும் வீதியில் உடுப்பு இன்றி மதுபோதையில் ஆண் ஒருவர் இருப்பதை கண்டு அந்தவீதியால் பெண்கள் பிரயாணிப்பதால் வரை திருத்துவதற்காக தும்புத்தடி பொல்லால் காலை 8.20 மணிக்கு தாக்கிவிட்டு சென்று பின்னர் மீண்டும் அந்த வீதியால் திரும்பிவரும் போது அவர் அவ்வாறே இருந்துள்ளதை கண்டு மீண்டும் தாக்கிவிட்டு சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சலமாக மீட்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.