முழு நேர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறித்த அறிக்கையினை கையளிக்குமாறு எரிசக்தி மின்சக்தி அமைச்சு போக்குவரத்துஅமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் முழு நேர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் அளவைவிட அதிக அளவில் எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.