எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது குறித்து விபரித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மண்ணெண்ணெய் இம்மாதம் 19ஆம் திகதி முதல் கடற்தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் துறையினருக்கும் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.