நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அவர்களின் கடந்த மாத சம்பளமும் மிகவும் சிரமப்பட்டு வழங்கப்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பளம் கொடுப்பதில் சிக்கல்

இந்நிலைமைக்கு மத்தியில் நாட்டில் உள்ள ஏனைய நிறுவனங்களின் நிலை குறித்து புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பளம் இல்லாமல் பணியாற்றக்கூடிய அமைச்சர்கள் இருக்கிறார்களா என ஊடகவியலாளர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். சம்பளம் இல்லாமல் எப்படி வாழ்வது? என சபாநாயகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நல்ல யோசனை ஒன்றை முன்வைத்தார். இங்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு சில வருடங்கள் விசா கொடுத்தால் நமக்கு டொலரை பெற்றுக்கொள்ள நல்ல வழி கிடைக்கும்.
உண்மையில் இது ஒரு நல்ல ஆலோசனை. அந்த வேலையை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
வெளிநாட்டவர்கள் இலங்கையில் சிறு தொழில்களை ஆரம்பிப்பதற்கு வசதி செய்து கொடுப்பதும் முக்கியமானதாகும் என சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.