சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பதற்கான இலங்கை சந்தையில் நுழைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல்
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொள்வதற்கும் அனுமதியளிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.
இந்த பிரேரணை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையின் எரிபொருள் விநியோகம்
தற்போது இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 90 வீதம் அரசாங்கத்திற்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும் எஞ்சிய 10 வீதமானது லங்கா ஐ.ஓ.சி மூலமாகவும் வழங்கப்படுகிறது.
