எனினும் குறித்த பரீட்சையின் செய்முறை பரீட்சைக்கு முழுமையாக தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
எனவே பரீட்சையில் தோற்றாத மாணவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பரீட்சை சுட்டெண், பெயர், பாடம் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் 0718 15 67 17 எனும் வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,10 ஆம் திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.