இலங்கையை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாக்கவா சீனக் கப்பல் வருகிறது? அரசு இதனை எவ்வாறு அணுகும்?
-கேதீஸ்-
இன்று இலங்கை பாரிய பொருளாதர நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமைக்கு கடந்த அரசாங்கத்தின் போக்குகள், சீனா இலங்கைக்கு கடந்த காலங்களில் கடன்களை வாரி வழங்கியமை, வருமானம் இல்லாத வகையில் அந்தக் கடன்கள் முதலீடு செய்யப்பட்டமை என்ன பல பிழையான பொருளாதார அணுகுமுறையால் நாடு நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது.
இலங்கை திருநாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டவுடன் இந்தியா பல வகைகளில் கை கொடுக்கத் தொடங்கியதுடன் தொடர்ச்சியாக பல உதவிகளையும் செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவை சீற்றம் ஏற்படுத்தும் வகையில் சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று இலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது என்கின்ற செய்தி இன்று பல ஊடகங்களிலும் பேசுபொருளாகும்.
இந்தியாவும் சீனாவும் பல விடயங்களில் முரண்பாடுகளைக் கொண்ட நாடுகள் என்பது யாவரும் அறிந்த விடயம். இலங்கையின் அண்மித்த வல்லரசு நாடாக இந்தியா இருக்கின்றபோது சீனாவின் உளவு கப்பல் ஒன்று இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியா பாரிய அதிருப்தியடைந்துள்ளது.
இலங்கைக்குள்ளும்,வெளியிலும் பாரிய அதிர்வுகளையும் எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் சீனாவின் இந்த உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவதால் இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி ஏற்படும் இது இந்த பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதில் பாரிய பின்னடைவுகளையும் ஏற்படுத்தலாம்.
சீனக் கப்பல் இலங்கை வருவது தொடர்பில் இலங்கைக்குள் இருக்கின்ற பல கட்சிகளும் பல அரசியல் ஆய்வாளர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அணுகப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவதால் இலங்கைக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை ஆனால் அது பிராந்திய பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என இந்தியா சிந்திப்பதில் தவறில்லை.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவுவது தொடர்பில் கடன் மீள் உருவாக்கத்தை செய்யும்படி கோரி இருக்கின்றது. இதற்கு சீனாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு அவசியமாகும்.
சீனாவையும் சமாளிக்க வேண்டிய ஒரு தேவை இலங்கைக்கு உள்ளது அதே வேளை இந்தியாவை வெறுக்க முடியாது. இந்த சூழ்நிலையை எவ்வாறு இலங்கை அரசாங்கம் முகம் கொடுக்கும் என்பது தற்போது காணப்படும் பெரிய கேள்வி