வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பிஏ 5 எனப்படும் கொரோனா வைரஸ் உப பிறழ்வு இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
வேகமாகப் பரவிவரும் இந்த பிறழ்வினால், எதிர்காலத்தில் நாட்டில் மோசமான நிலைமை ஏற்படக் கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வகை இதுவாகும் எனக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக கொழும்பை சூழவுள்ள பிரதேசங்களில் இந்த பிறழ்வு காணப்படுவதாகவும் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கவனமாக செயற்படுவது மிகவும் அவசியமானது என்றும் குறிப்பிட்டார்.