22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகருக்குச் சென்ற இலங்கையை சேர்ந்த 5 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதன்படி, நான்கு விளையாட்டு வீரர்களும் பயிற்றுவிப்பாளர் ஒருவருமே இவ்வாறு கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த குழு தற்போது தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் உள்ள அலெக்சாண்டர் மைதானத்தில் நாளை (29) இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதில் 72 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 5,054 வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.