இலங்கையில் எரிபொருளுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலுக்கு மாற்றீடாக சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தின்னர் மற்றும் டெபர்ன்டைன்
சிலர் பெற்றோலுடன் தின்னர் மற்றும் டெபர்ன்டைன் போன்ற பொருட்களை கலந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால் தின்னர் மற்றும் டெபர்ன்டைன் என்பனவற்றுக்கு அதிகளவு கேள்வி எழுந்துள்ளது.

கறுப்புச் சந்தை நிலவரம்
கறுப்புச் சந்தையில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 3000 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசலின் விலை 2000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
எனினும், தின்னர் கலந்த பெற்றோலின் விலை 1500 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
