இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பிரதமராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
புதிய அமைச்சரவை சற்று நேரத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படவுள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. அலரிமாளிகையில் இன்று காலை குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பதவிப்பிரமாண நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரசன்னமாகியுள்ளனர்.
மேலும் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுவதுடன், வெளிவிவகார அமைச்சு பதவி அலி சப்ரிக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.