புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து
புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை நாட்டின் 8ஆவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு சர்வதேச இந்துமத பீடச்செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . பொருளாதார நெருக்கடியை மீட்டெடுத்து மக்கள் மன திருப்தியுடன் வாழக்கூடிய சூழ்நிலையை கையாளக்கூடிய தலைவர்.இவரது தலைமையில் பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீண்டு நல்ல நிலைக்கு வருவதுடன் சர்வதேச ஆதரவுடன் இலங்கை நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடம் சுமத்தப்பட்டுள்ளது. மக்களை உணர்ந்து மக்களின் மனதை அறிந்து செயற்பட்டு மக்களுக்கு மன நிம்மதியுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.அது இறைவன் உங்களுக்கு தந்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும் என சர்வதேச இந்துமத படத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களுடன் கூடிய ஆசி செய்தியினை தெரிவித்துள்ளார்.

