கல்வியில் சனத்தொகை  பாதிப்பை செலுத்துகிறதா?

உலகில் சனத்தொகை வளர்ச்சி அல்லது வீழ்ச்சி பல வகையான தாக்கங்களை நாடுகளில் ஏற்படுத்தி வருவதை அறிவோம்.

இலங்கையிலும் சனத்தொகை பல கோணங்களில் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக கல்வியிலும் அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகத் தெரிவிலும் அதன் தாக்கம் இருக்கவே செய்கிறது.

எனவே கல்வியில் சனத்தொகை  பாதிப்பை செலுத்துகிறதா? எனக் கேட்டால் ஆம் என்று பதில் கூறமுடியும்.

இலங்கையில் நேற்று முன்தினம் வெளிவந்த கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளுக்கான பல்கலைக்கழக தெரிவு எவ்வாறு சனத்தொகையை மையமாக வைத்து மாறுகிறது என்பதை பார்ப்போம்.

2024 சனத்தொகை பிரகாரம் மருத்துத் துறை தெரிவிற்கான கோட்டாவில் சில மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன.

2023/24 மருத்துவத்துறை உள்ளீர்பை மையமாக வைத்து இந்த கணிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவின் கோட்டா தலா இரண்டால் குறைவடைகின்றது.

கிளிநொச்சி, மன்னார் முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பின் கோட்டா தலா ஒன்றால் அதிகரிக்கின்றது.

யாழ்ப்பாணம் 38 (-2)

வவுனியா 11 (-2)

நுவரெலியா 47 (-2)

திருகோணமலை 27 (0)

கிளிநொச்சி 9 (+1)

முல்லைத்தீவு 8 (+1)

மன்னார் 8 (+1)

மட்டக்களப்பு 38 (+1)

அம்பாறை 48 (+1)

அதே போன்று 2024 சனத்தெகை பிரகாரம் பொறியியல் துறை தெரிவிற்கான கோட்டாவிலும் சில மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன.

2023/24 பொறியியல்துறை உள்ளீர்பை மையமாக வைத்து இந்த கணிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தின் கோட்டா இரண்டால் குறைவடைகின்றது. வவுனியாவில் ஒரு கோட்டா இழக்கப்படுகின்றது.

திருகோணமலை, அம்பாறை மற்றும் முல்லைத்தீவினது கோட்டா தலா ஒன்றால் அதிகரிக்கின்றது.

மன்னார் மற்றும் மட்டக்களப்பின் கோட்டா இரண்டால் அதிகரிக்கின்றது.

யாழ்ப்பாணம் 41(-2)

வவுனியா 12 (-1)

நுவரெலியா 50 (-3)

கிளிநொச்சி 9 (0)

முல்லைத்தீவு 8 (+1)

மன்னார் 9 (+2)

திருகோணமலை 30 (+1)

அம்பாறை 51 (+1)

மட்டக்களப்பு 41( +2)

எனவே சனத்தொகையும் எமது தலைவிதியை தீர்மானிக்கும் காரணி என்பதை மறந்து விட முடியாது.

வி.ரி.சகாதேவராஜாஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் காரைதீவு