28.04.2025 (திங்கட்கிழமை) முதல் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் காது, மூக்கு ,தொண்டை பிரிவு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.   பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் மக்கள் பாவனைக்காக இதனை திறந்து வைத்தார்.
இந் நிகழ்வின்  வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

காது, மூக்கு, தொண்டை சாய்சாலையானது
வார நாட்களில்  காலை 8.00 முதல் 12 மணி வரையும் இயங்கும். அதே வேளை சனிக்கிழமைகளில் விசேட சேவையாக  உத்தியோகஸ்தர்கள் மாணவர்கள் சிகிச்சை பெற ஒதுக்கப்பட்டுள்ளது .


ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் கிளினிக் இடம் பெறமாட்டாது.
இங்கு மாதாந்தம் சுமார் 500 நோயாளர்கள் பயன் பெறுவதுடன்,  வருடத்திற்கு 6000 நோயாளர்கள் சிகிச்சையின் பலனை பெறுகின்றனர்.
மேலும் இவ் இடமாற்றமானது நோயாளர்களின் வருகை அதிகரிப்பை ஈடு செய்யும் வகையில் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.