உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசின் தேர்தல் பிரசாரம் மும்முரம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் திருக்கோவில் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருக்கோவில் 5ஆம் வட்டார வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் அவர்களின் தலைமையில் மக்கள் ஒன்றுகூடல் பிரச்சாரக்கூட்டமும் திருக்கோவில் ஆறாம் வட்டார போட்டியாளர் ராஜேஸ்வரன் தலைமையில் திருக்கோவில் முதலாம் இரண்டாம் பிரிவுகளில் தன்னுடைய பிரச்சார நடவடிக்கைகளும் நேற்று இடம் பெற்றன.