அடிப்படைவாத பயங்கரவாதிகள் நடாத்திய கொடூர தாக்குதல் இடம் பெற்று ஆறு வருடங்கள்!
அடிப்படைவாத பயங்கரவாதிகள் இலங்கையில் கொடூர தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் ஆறு வருடங்கள்
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 407 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 6 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை என்பது மக்கள் மத்தியில் பேசு பொருளாகவே இருந்து வருகின்றது. இந்த அரசாங்கம் சம்மந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நிறைவேறுமா?