அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை மீது விதித்த இறக்குமதி வரியை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதி மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருட்களுக்கான இறக்குமதி வரியாக 44 வீதத்தை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அது 54 சதவீதம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த 10 சதவீத அடிப்படை வரிக்கு கூடுதலாக இந்தப் புதிய வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த வரி விகிதம் 54 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறான நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீண்டும் வரும் வகையில் வரி நிவாரணம் அளிக்குமாறு இலங்கை, அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ள இலங்கை தூதுக்குழுவொன்று நாளையதினம் அமெரிக்கா நோக்கி பயணமாகவுள்ளது.
இதில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட பல துறைசார் நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.