வெல்லாவெளி 37ஆம் கிராமத்தில் புத்தாண்டு தினத்தில் யானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் புத்தாண்டு தினத்தில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச்சம்பவம் நேற்று (14) பதிவாகியுள்ளது.

நேற்று (14-04-2025)அதிகாலை 1மணிக்கு வீட்டுக்கு முன்பக்கமாகவுள்ள முற்றத்தில் வைத்து காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி 3 பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய இராசதுரை சசிகரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
சத்தம் ஒன்று கேட்பதாக கூறி வெளியே வந்தவரை எதிர்பாராத விதமாக யானையை தாக்கி உள்ளது.
யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தவரை உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வேளை வைத்தியசாலையில் அதிகாலை 4.30மணிக்கு சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் சேனைக்குடியிருப்பை சொந்த இடமாகக்கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது