பெரியநீலாவணை “சுபமங்களா” முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தின் ஒன்று கூடலும் முதியோர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.

-பிரபா –

பெரியநீலாவணை “சுபமங்களா” முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தின் ஒன்றுகூடலும் முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் இன்றைய தினம்(13) ஒன்றியத்தின் காரியாலயத்தில் அதன் ஸ்தாபக தலைவர் திரு . எஸ். யோகராஜா தலைமையில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் அதிதிகளாக சித்த வித்தியார்கே சிசுபாலன் ஐயா, ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர் திரு. பி. ஜெகநாதன், காவேரி கல்வி ஒன்றிய தலைவர் திரு. வே. அரவிந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சி. குமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் சிங்கள புது வருடத்தினை முன்னிட்டு சங்கத்தின் முதியோர்களை கௌரவப்படுத்தும் நோக்கோடு அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, சுபமங்களா முதியோர் நல ஒன்றியத்தில் சேமிப்பு செய்தவர்களுடைய சேமிப்பு பணங்கள் சிலருக்கு கையளிக்கப்பட்டது. மேலும் முதியோர்களது பிறந்த தினத்தினை முன்னிட்டு பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளும் முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.