நேற்று தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் நேற்று (12) திறப்பு 

( வி.ரி.சகாதேவராஜா)

தேசிய மக்கள் சக்தி கட்சியின்  காரைதீவு 6,7.10 பிரிவுகளின் 4ம்  வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் நேற்று (12) சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

 அந் நிகழ்வில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா மற்றும் மஞ்சுள ரத்நாயக ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

முன்னதாக தேர்தல் பரப்புரை அலுவலகம் தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச ஆலோசகர் ரி.தெய்வநாயகம் முன்னிலையில் அதிதிகளால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி சார்பான வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.