அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும்.

சமயநெறியானது – ஒவ்வொரு சமயத்தினரையும் வழிப்படுத்துவதாக, நெறிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழ் வருடங்கள் 60ல் 39வது வருடமாக விசுவாவசு எனும் நல்நாமத்துடன் பிறக்கின்றது. வருட ஆரம்பநாளில் அனைவரும் அமைதியான முறையில் இறை பிரார்த்தனையுடன், பெரியோர் முன்னோர் வணக்கத்துடன் தினசரி விடயங்களை ஆரம்பித்து தொடர்வது வழமை.

சமயங்கள் வாழ்வியலை போதித்து நிற்கிறது. நாம் ஒவ்வொருவரும் சமயநெறி காட்டிய ஒழுங்கில் வாழ முயற்சி செய்து அவ்வாறே வாழ வேண்டும்.
எமது சைவத்தமிழ் மக்கள் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பலமும் பெற்று இன்பகரமாக வாழ்க என அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்து மனமார்ந்த நிறைந்த நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

சிவாகமகலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர் இந்துக் குருமார் அமைப்பு.

சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.
செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.
12.04.2025.