கிழக்கு மாகாண பணிப்பாளராக எந்திரி இராஜமோகன் நியமனம்
( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பதில் பணிப்பாளராக எந்திரி பரமலிங்கம் இராஜமோகன் நியமிக்கப்பட்டுள்ளார் .
இதுவரை கிழக்கு மாகாண பணிப்பாளராக இருந்த எந்திரி வ.கருணநாதன் கடந்த சனிக்கிழமை சேவையில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எந்திரி ராஜமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் காலமாகையால் பதில் நியமனமாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் நேற்று திருகோணமலை சென்று கடமையை பொறுப்பேற்றார்.
காரைதீவைச் சேர்ந்த எந்திரி. பரமலிங்கம் இராஜமோகன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளராக கடமையாற்றி வருகிறார். இந்த வேளையில் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் இந்த கடமைக்கு மேலதிகமாக மாகாண பணிப்பாளர் கடமையையும் மேற்கொள்ள இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது .
பட்டயப் பொறியியலாளரான இவர் இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின்( IESL) கிழக்கு மாகாண தலைவராகவும், காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தர்மகத்தாவாகவும், கல்முனை லயன்ஸ் கழக தலைவராகவும் மற்றும் பல சமூக சமய அமைப்புகளில் சேவையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
