‘உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களூடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனைத் தொடர்புபடுத்தும் கணிசமான தகவல்கள் உள்ளன.
இது தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன. எந்தவொரு குற்றத்தையும் மறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எந்தவொரு குற்றவாளியும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க மாட்டோம்.’
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்