புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது உரிமையாளர்களின் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக் கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் ஆட்டோ தவிர்ந்த ஏனைய அனைத்து புதிய மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வருமான வரி துறையினரால் வழங்கப்பட்டTIN இலக்கத்தையும் அதனை உறுதிப்படுத்தும் முறையான சத்தியக்கடதாசியை சம்பந்தப்பட்ட உரிமையாளர்
சமர்ப்பிக்க வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.