(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 127ஆவது ஜனனதின நிகழ்வானது திருக்கோவிலில் இடம்பெற்று இருந்தது.

இந்நிகழ்வானது திருக்கோவில் 5ஆம் வட்டாரக் கிளையின் தலைவர் பி.நந்தபாலுவின் தலைமையில் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தில் இடம்பெற்று இருந்தது.

இதன்போது சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என இயற் பெயர் கொண்ட தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு அம்பாரை மாவட்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களால் மலர் மாலை அணிவித்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தவர்கள் மலர் தூபி தமது அஞ்சலிகளை தெரிவித்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சமாதிப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருபாகர சர்மா அவர்களினால் ஆசீயுரை இடம்பெற்றதைத் தொடர்ந்து தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து தந்தை செல்வாவின் அரசியல் பயணம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் விசேட உரையும் இடம்பெற்று இருந்தது

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தமிழரசு கட்சியின் ஐந்தாம் வட்டாரக் கிளை நிருவாக உறுப்பினர்கள் திருக்கோவில் பிரதேச முன்னாள் உறுப்பினர் திருக்கோவில் சபை வேட்பாளர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.