மாதாந்திர எரிபொருள் விலையில் இன்று(31) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை குறைத்துள்ளது.

ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.

அதேபோல், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.