மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்புப்  பெருநாள் தொழுகை

(ஏ.எல்.எம்.ஷினாஸ், ஜெஸ்மி எம். மூஸா, றாசிக் நபாயிஸ், முஜீப் சத்தார், றாஜித்)   

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில்  புனித ஈதுல் பித்ர் நோன்புப்   பெருநாள் தொழுகை இன்று (31) காலை  6:20 மணிக்கு நடைபெற்றது.

இம்முறை கடற்கரை திறந்த வெளியில் இமாம் ஜமாத்தாக நடைபெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெருநாள் தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல். முபாறக் (மதனி) நடாத்தினார். ஆண்கள், பெண்களுக்கு வெவ்வேறாக இட வசதிகள் ஒதுக்கப்பட்டு தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீன் மண்ணில் நமது முஸ்லிம் உறவுகள், அப்பாவி சிறுவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து இந்த நோன்புப் பெருநாள் தினத்தில் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இங்கு குத்பா பிரசங்கத்தை நிகழ்த்திய மௌலவி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.