கல்முனை தமிழ்ச்  சங்க பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் 2025

(பிரபா)

கல்முனை தமிழ்ச்  சங்க பொதுக் கூட்டமும், புதிய நிருவாக தெரிவும் இன்று 31.03.2025 திங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடை பெற்றது.

2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலக திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டு வந்த கல்முனை தமிழ் சங்கம் 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புனரமைக்கப்படாமல், இயங்காநிலையில் இருந்ததன் காரணமாக அதனை மீள செயற்படுத்த வேண்டும் எனும் நோக்கோடு, கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு எஸ். நவநீதன் மற்றும் கிழக்கு மாகாண மீன்பிடி துறை பணிப்பாளர் திரு எஸ். சுதாகரன் ஆகியோரது ஆலோசனை, வழிகாட்டலில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு T,J. அதிசயராஜ் தலைமையில் கலாசார உத்தியோனத்தர் பிரபாகரன் அவர்களது ஒருங்கிணைப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கல்முனை தமிழ்ச்  சங்க புனரமைப்பு கூட்டம் இன்று (31) நடைபெற்றது.

கல்முனை பிராந்திய எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் தலைமை உரையை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T,J அதிசயராஜ் அவர்கள் நிகழ்த்தியதோடு, தற்காலத்தில் கல்முனை தமிழ் சங்கத்தின் அவசியம் தொடர்பாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலக பணிப்பாளர் அவர்கள் உரையாற்றினார்.

தொடர்ந்து கல்முனை தமிழ் சங்கத்துக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

இதன் செயலாளராக திரு எஸ். ரகுவரன் அவர்களும், தலைவராக திரு. சஞ்சீவி சிவகுமார். அவர்களும், பொருளாளராக திரு. க.டனிஷ்கரன் அவர்களும், உப தலைவராக ஒய்வு பெற்ற அதிபர் திரு v. பிரபாகரன் அவர்களும், உபசெயலாளராக செல்வி கஜானா சந்திரபோஸ் அவர்களும், தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்களாக அக்கரை பாக்கியன்,சிறி வேல்ராஜா ,சுதாகரன், றீசா பத்திரன, டேவிட், ஜெனிற்றா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் ஆலோசர்களாக எழுத்தாளர் உமா வரதராஜன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர், மற்றும் டாக்டர் புஷ்பலதா ஆகியோரும் தெரிவாகினர்.


கல்முனை தமிழ் பிராந்திய தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கத்திற்காகவும், கலை, இலக்கிய அமைப்பாகவும், கல்முனை பிராந்திய தமிழ் மக்களின் பண்பாட்டையும், மொழியையும், வாழ்வியலையும், மற்றும் விழுமியங்களையும், பேணிப் பாதுகாத்து அதனை அடுத்த சந்ததிக்கு கையளிக்கும் நோக்கோடு இந்த தமிழ்ச் சங்கம் செயற்பட உள்ளது.