மட்டக்களப்பு கழுதாவளை, திருப்பழுகாமம் இடையிலான நீர்வழிபடகு பாதை சேவை விரைவில் ஆரம்பிக்கபடும்.
(பிரபா)
நேற்று தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் களுதாவளை திருப்பழுகாமம் இடையிலான பாதை சேவை ஆரம்பம் சம்பந்தமாக தளத்திற்கு வருகை தந்து பாதை சேவையினை ஆரம்பிப்பதற்கான சாத்தியகூறுகளை ஆராய்ந்ததுடன்,மிக விரைவில் இந்த பாதை சேவையினை ஆரம்பித்து மக்களுக்கு இந்த சேவையை பெற்று தருவதாக உறுதி அளித்தார்.
இந்த சேவை 1990ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையால் நிறுத்தப்பட்டது.
மூன்று தசாப்தங்களாக கவனிப்பார் அற்று இருந்த இந்த சேவை மிக விரைவில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் குருமன்வெளி மண்டூர்,மற்றும் குருக்கள்மடம் அம்பிளாந்துறை போன்ற இடங்களில் நீர்வழிப் பயனத்துக்காக புதிய இயந்திர படகு பாதைகளை அரசு வழங்கியுள்ள நிலையில் அதனை சேவையில் ஈடுபடுத்துவதற்காக பொருத்தும் பணிகள் நடைபெறுவதனையும் பாராளுமன்ற உறுப்பினர் (29)பார்வையிட்டார்.





